All the bits and pieces that make up your BBC micro:bit

An anatomy diagram of the BBC micro:bit

விளக்குகள்

முன்னாலுள்ள சிவப்பு விளக்குகள் யாவை?

அந்த சிவப்பு விளக்குகள் LEDs ஆகும். அவை 5 x 5 கோட்டுரு ஒன்றை உருவாக்குகின்றன. அவற்றை செயற்படுத்தவோ/ செயலிழக்கச் செய்யவோ முடியும். அத்துடன் வெளிச்சத்தைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

மைக்ரோ:பிட்டின் பின்னாலுள்ள மஞ்சள் விளக்கு யாது?

அது status LED ஆகும். சுற்றில் ஏதேனும் ஆகும்போது அதனைப் பாவனையாளருக்குத் தெரியப்படுத்துவதற்காகவே அது பொருத்தப்பட்டுள்ளது.

ஆளிகள்

அந்த ஆளிகள் எதற்காக?

ஆளிகள் A மற்றும் B ஆகியன உள்ளீட்டுக்கானவை. ஒரு ஆளியை அழுத்தும்போது ஒரு மின்சுற்று பூர்த்தியடையும். மைக்ரோ:பிட் ஆனது தனது அழுத்தப்பட்ட மற்றும் அழுத்தப்படாத இரண்டு ஆளிகளையும் இனங்கண்டு அதற்கேற்ப செயற்பட்டு தகவை மற்றக் கருவிகளுக்கு அனுப்பும் வண்ணம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

மைக்ரோ:பிட்டின் பின்னாலுள்ள R எனும் ஆளி ஒரு சிஸ்டம் ஆளி ஆகும். இது பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. உங்கள் code இனை நீங்கள் உங்கள் மைக்ரோ:பிட்டுக்கு download செய்து, ஆளி Rஇனை அழுத்தி restart பண்ணி, உங்கள் program இனை முதலிலிருந்து செயற்படுத்தலாம்.

உங்கள் மைக்ரோ:பிட்டினை மின் தொடுப்பில் ஈடுபடுத்தும்போது, அது MICROBIT எனக் காணப்படவேண்டும். ஒருவேளை நீங்கள் தவறுதலாக reset ஆளியை அழுத்தியவண்ணம் தொடுப்பில் இட்டால், அது உங்கள் கணனியில் MICROBITக்குப் பதிலாக, MAINTENANCE drive என்றே காணப்படும். இது maintenance mode** என்றே அறியப்படும்.

மைக்ரோ:பிட்டின் programmingகைத் தொடர்வதற்கு உங்கள் USB ஐத் தொடுப்பு நீக்கிவிட்டு மறுபடியும் தொடுப்பை ஏற்படுத்தவேண்டும். இப்பொழுது ட்ரைவ் ஆனது MICROBIT எனக் காட்டுகிறதா என்று பார்க்கவும்.

**கவனத்தோடு பயன்படுத்தவும். நீங்கள் உங்கள் ட்ரைவ் ஆனது MAINTENANCE எனக் காட்டும்போது அதனைக் க்ளிக் செய்தால் அதில் செயற்படும் Firmware versionஐ நீங்கள் அறிந்துகொள்ளலாம். உங்கள் மைக்ரோ:பிட்டிலுள்ள Firmware ஆனது அப்டேட் செய்யப்பட்டு இருக்கவேண்டும். Firmware versionஐ நீங்கள் 'version.txt' file இல் அறிந்துகொள்ளலாம். மேலதிக தரவுகள் இங்கு காணப்படும்:

https://mbed.com/daplink

திசைகாட்டி

மைக்ரோ:பிட்டில் திசைகாட்டி எதற்காக வைக்கப்பட்டுள்ளது?

திசைகாட்டியால் புவிக்காந்தப்புலம் போன்ற ஏனைய காந்தவிசைகளை இனங்காண முடியும். இத்தகைய திசைகாட்டி இருப்பதனால், மைக்ரோ:பிட்டினால் இயங்கும் திசையை இனங்காண முடியும். தான் இயங்கும் திசையையும், கோணங்களையும் இனங்காணமுடியும். இத்தகைய தரவுகள் மைக்ரோ:பிட்டின் Programஇலோ அல்லது, இன்னொரு கருவியிலோ பயன்படுத்த முடியும்.

ஆர்முடுக்கிமானி

மைக்ரோ:பிட்டில் எதற்காக ஆர்முடுக்கிமானி பொருத்தப்பட்டுள்ளது?

இதில் ஆர்முடுக்கிமானி ஆனது இருப்பதனால் மைக்ரோ:பிட்டின் வேகத்தில் ஏற்படும் மாற்றத்தை இனங்காண முடியும். இது அனலொக் தரவுகளை டிஜிட்டலாக மாற்றி ஏனைய மைக்ரோ:பிட் ப்றோகிராம்களில் செயற்படுத்த உதவுகிறது. இதன் வெளியீடு milli-gஇல் இருக்கும். அதோடு இவ் ஆர்முடுக்கிமானி ஆனது, சின்ன அசைவுகள் மற்றும் விழுதலையும் இனங்காணும்.

ஊசிகள்

மைக்ரோ:பிட்டின் கீழ் விளிம்பில் 0,1,2 என இலக்கமிடப்பட்ட வளையங்கள் யாவை?

இவை உள்ளீட்டு/வெளியீட்டு ஊசிகளான P0, P1, P2 ஆகியவற்றின் பெயரீடுகள் ஆகும். இவற்றுடன் நீங்கள் பிரத்தியேக சென்சர்கள் ஆன வெப்பமானி அல்லது ஈரப்பதன் உணரிகள் போன்றவற்றைத் தொடுக்கலாம். இந்த ஊசிகள் உள்ளீடாகவோ அல்லது வெளியீடாகவோ பயன்படுத்தப்படலாம். பெரிய மற்றும் சிறிய ஊசிகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள here

எனது மைக்ரோ:பிட்டினை நான் எப்படி கணனியுடன் இணைப்பது?

அது மைக்ரோ USB இன் உதவியுடன் இணைக்கப்படலாம். இந்த USB தொடர்பின் வாயிலாக தரவுகள் கணனிக்கும், மைக்ரோ:பிட்டுக்கும் மாத்திரமன்றி விண்டோஸ் அல்லது Macஇலிருந்து நேரடியாக மைக்ரோ:பிட்டுக்குத் தரவிறக்கம் செய்யப்படவும் முடியும். மைக்ரோ:பிட்டில் Scriptகளை செயற்படுத்துவது பற்றி மேலும் தெரிந்துகொள்ள, here அத்துடன் தோன்றும் Error மெசேஜ்கள் பற்றி அறிந்துகொள்ள here

மின்கலங்கள்

மைக்ரோ:பிட்டினை மின்னேற்றுவது எப்படி?

உங்கள் பிபிசி மைக்ரோ: பிட் மைக்ரோ USB உடன் உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ளபோது வேறு சக்தி மூலம் அதற்குத் தேவையில்லை. உங்கள் பிபிசி மைக்ரோ: பிட்டினை உங்கள் கணினியுடனோ, டேப்லட்டுடனோ அல்லது மொபைலுடனோ இணைக்காதபோது , 2 x AAA 1.5 V மின்கலங்கள் தேவை.

3V GND வளையங்கள்

3V GND எனப் பெயரிடப்பட்ட வளையங்கள் யாவை?

3V மற்றும் GND எனக் குறிப்பிட்ட ஊசிகள் மின் விநியோகத்துக்கான ஊசிகள் ஆகும். நீங்கள் மோட்டார் ப்ற்றுோன்ம்ற வெளிப்புறச் சாதனங்களுடனும் மின்சக்தி மின்கல அல்லது USB கொண்டு இயங்கும் வேளையில் இணைக்கலாம்.

புளூடூத்

புளூடூத் குறை சக்தி ஆன்டென்னா என்றால் என்ன?

BLE ANTENNAvai நீங்கள் உங்கள் மைக்ரோ:பிட்டின் பின்புறம் காணலாம்.இது கருவிகள் தமக்கிடையே தரவுகள் பரிமாறிக்கொள்ள அமைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ:பிட்டினால் சமிக்ஞைகளை வெளிப்படுத்தவோ அல்லது உள்வாங்கவோ முடியும். இதனால் இன்னொரு BLE கருவியினால் மைக்ரோ:பிட்டினைக் கட்டுப்படுத்தவோ அல்லது கட்டுப்படுத்தப்படவோ முடியும்.

குறை சக்தி புளூடூத் என்றால் என்ன?

புளூடூத் வயர்லெஸ் தொழில்நுட்பம் ஆனது வயர்கள் கொண்ட தரவுகடத்திகளுக்கு மாற்றீடாகத் தயாரிக்கப்பட்டதாகும். இதன்மூலம் கணனி, தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்களிடையில் தொடர்பாடல் நிகழ்த்தமுடியும். புளூடூத்® ஸ்மார்ட் அல்லது குறை சக்தி புளூடூத் ஆனது சக்திக்கேற்ப செயற்படவல்ல வகையான புளூடூத் வயர்லெஸ் தொழில்நுட்பக் கருவி ஆகும்.

பொருள் வலையமைப்பு என்றால் என்ன?

பொருள் வலையமைப்பானது 15 வருடங்களுக்கு முன்னரே பேசப்பட்டது. இதன்படி இணையத்தைப் பயன்படுத்தி மனிதர்களும் பொருட்களும் கூட தொடர்பாடமுடியும். பொருட்களை ரிமோட் மூலமாக இயக்கமுடிவதால் கணனிமய உலகுக்கும், நிஜத்துக்குமான இணைப்பாக இது அமையும். இதன்மூலம் உங்களால் உங்கள் வீட்டிலுள்ள அலாரம், தேர்மோ ஃப்ளாஸ்க் அல்லது மின்விளக்குகளையும் ரிமோட்மூலம் இயக்கமுடியும். இதன் பயன்பாடுகள் தயாரிப்பு, மருத்துவம் உள்ளிட்ட பலதுறைகளிலும் பயன்படும்.

தொழில்நுட்ப தகவல்கள்

மைக்ரோ:பிட் ஆனது 11-12 வயதான குழந்தைகளுக்கான bare-board micro controllerஆக இருக்கும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு திறந்த முன்னேற்ற வடிவமைப்பு ஆகும். இனிவரும் பாவனையாளர்கள் இன்னும் நன்கு பயன்படுத்தும்வண்ணம் நாம் இதனை மெருகேற்றிவருகின்றோம்.

இந்தக் கருவி ஆனது தொடர்ந்த பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் பரீட்சைகளுக்கு உட்படுத்தப்படுவதன் மூலம் கீழுள்ள தரத்துக்குக் கொண்டுவரப்படுகிறது:

பாதுகாப்பு

IEC 60950-1:2005 (Second Edition) + Am 1:2009 + Am 2:2013

EMC

EN 55032: 2012

EN 55024: 2010

EN 55022:2010

EN 301 489-1 V1.9.2 (2011-09)

EN 301 489-17 V2.2.1 (2012-09)

Radio Spectrum

ETSI EN 300 328 V1.9.1 (2015-02)

EN 62479:2010

This device complies with Part 15 of the FCC Rules. Operation is subject to the following two conditions: (1) this device may not cause harmful interference, and (2) this device must accept any interference received, including interference that may cause undesired operation.

Chemical

Restriction of Hazardous Substances (RoHS) 2011/65/EU Annex II article 4(1)

EN71-3:2013 + A1:2014 - Migration of certain elements.

Analysis of the 163 substances of very high concern (SVHC) on the Candidate List for authorization, concerning Regulation (EC) No. 1907/2006 as published on the European Chemicals Agency (ECHA) website.

Bluetooth 4.0 logo, CE mark, WEEE symbol

The BBC micro:bit device features Bluetooth Low Energy radio. The radio on the device operates in the following frequencies:

Frequency Range: 2402MHz to 2480MHz

Bluetooth Version: V4.0 Bluetooth Low Energy

EU Declaration of Conformity

The document can be downloaded by clicking here for the Declaration of Conformity