All the bits that make up your BBC micro:bit

பிபிசி மைக்ரோ: பிட் முன்பக்கம் மீண்டும் பிபிசி மைக்ரோ: பிட்

நீங்கள் உங்கள் ஆக்கங்களை Coding செய்வதற்கும், அதனைப் பகிர்வதற்குமான மையமாக மைக்ரோ:பிட் பயன்படும். உங்கள் பயன்பாட்டினை இன்னும் இலகுவாக்குமுகமாக நாங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆகவே ஏதேனும் பின்னூட்டங்கள் இருந்தால், அதனை எமக்கு அறியத் தருவது சிறப்பாக இருக்கும். நீங்கள் எப்போதும் எம்மை கீழ்வரும் வழிகளில் தொடர்பு கொள்ளலாம். help@microbit.org

BBC இன் மைக்ரோ:பிட்டினை நீங்கல் எல்லாவகையான ஆக்கங்களுக்கும் பயன்படுத்தலாம். ரோபோக்களிலிருந்து இசைக்கருவிகள் வரை- இதன் பயன்பாடுகள் முடிவற்றவை. இந்தச் சிறிய கருவிக்குள் செய்திகளை வெளிப்படுத்தும் 25 சிவப்பு LED விளக்குகள் உள்ளன. இரண்டு கட்டுப்பாட்டு Buttonகள் விளையாட்டுக்களுக்கும், இசையை நிறுத்தவும் பயன்படக்கூடியன. அதோடு உங்கள் BBC மைக்ரோ:பிட் ஆனது நீங்கள் பயணிக்கும் திசையையும் கணித்துக் கூறவல்லது. அதுமட்டுமன்றி குறைந்தளவு சக்தியில் Bluetooth மூலம் ஏனைய கருவிகளுடன் இணைப்பில் ஈடுபடலாம்.

எங்களுடைய Hardware Pageஐப் பார்வையிடவும். மைக்ரோ:பிட் ஆனது ஒரு திறந்த Development Board ஆகும். இதில் நீங்கள் codingஐ செயற்படுத்தி முழுமையாக செயற்படமுடியும். நாம் இதில் பிழைதிருத்தும் செயற்பாட்டையும் அனுமதித்துள்ளோம். எனவே நீங்கள் முழுமையாக தவறுகளை ஆராய முடியும். மைக்ரோ:பிட் குறித்த உங்கள் அறிவினை நீங்கள் விருத்தி செய்வதற்கேற்ப, நீங்கள் அதன்மூலம் பல ஆக்கங்களை வெளிப்படுத்தலாம்.

இந்த வெப்சைட்டில் தான் நீங்கள் விரும்பியபடி Scriptகளை செயற்படுத்தி உங்கள் BBC மைக்ரோ:பிட் குறித்த கனவுகளை நனவாக்கலாம். யார் வேண்டுமானாலும்Coding எழுதி, அதனை BBC micro:bit online simulatorஇல் செயற்படுத்திப் பார்க்கலாம். அதோடு editorகளை உங்கள் கணனியிலும், Tabletகளிலும், ஸ்மார்ட் ஃபோனிலும் அல்லது பாடசாலைகளிலும் கூட செயற்படுத்த முடியும்.

மொபைல் தொலைபேசி அல்லது Tablet பாவிக்கின்றீர்களா? நீங்கள் coding செய்து, அனுப்புவதற்காக Bluetoothக்கு மேலதிகமாக மைக்ரோ:பிட் app உள்ளது. இது பற்றி mobile page இல் மேலும் அறிந்துகொள்ளலாம்.

இன்னும் ஏன் தாமதம்? சில குறுகிய வீடியோக்களைப் பார்த்துவிட்டு மைக்ரோ:பிட்டில் get started ஆக்கங்களைத் தொடங்குங்கள். இன்னும் பல code editors பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். எமது Tutorialகளையும் மற்றும் Projectகளையும் பார்வையிடுங்கள்.

BBCமைக்ரோ:பிட்டின் மூலம் வருங்காலத்தின் தேர்ந்த தொழில்நுட்பவியலாளராகுங்கள். டிஜிட்டல் உலகு உங்களுக்கு சிப்பி போன்று இலகுவானதாகும்.

மைக்ரோ:பிட்டினை எங்கே பெற்றுக்கொள்ளலாம்?

மைக்ரோ :பிட்டினை இலகுவாகவும், குறைந்த விலையிலும் எங்கும் பெறக்கூடியதாகவும் உலகெங்கும் கொண்டுவருவதே எமது நோக்கமாகும். எமது திறமையான விற்பனையாளர்கள் Our super resellers கண்டிப்பாக உங்களுக்குரிய மைக்ரோ:பிட்டினைப் பெற்றுத் தருவார்கள். உங்கள் பிரதேசத்தில் இல்லையா? கவலை வேண்டாம், நாங்கள் இப்போது ஐரோப்பாவில் விரிவாக்க ஆரம்பித்துள்ளோம். அடுத்து அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்கா என விஸ்தரிக்கவுள்ளோம்.